TNPSC Group 4 Vacancy Increased 2023

TNPSC Group 4 Vacancy Increased 2023 குரூப் 4 பணியிடங்கள் உயர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு

TNPSC Group 4 Vacancy Increased 2023

குரூப் 4 பணியிடங்கள் உயர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு

TNPSC Group 4 Vacancy Increased 2023 அரசு பணி கனவு உடன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ள நிலையில் நேர்காணலுக்கு முன்பு குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களை அரசு உயர்த்தி அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

TNPSC Group 4 Vacancy Increased 2023
TNPSC Group 4 Vacancy Increased 2023

பட்டப்படிப்பை முடித்து வெளியே வரும் இளைஞர்களின் சுமார் 40% பேரின் கனவு அரசு பணியாகத்தான் உள்ளது தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு சுமார் 33 லட்சத்துக்கு அதிகமான பட்டதாரிகள் உருவாகின்றனர். இவர்களில் சுமார் 8 லட்சத்துக்கு அதிகமானோர் அரசு பணி வாய்ப்புக்கான முயற்சியிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர் ஆனால் அவர்களில் எத்தனை பேர் முயற்சி வெற்றி கிடைக்கிறது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

அரசு துறைகளில் ஆண்டுதோறும் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் பணி ஓய்வு பெறுகின்றனர் ஆனால் அத்தனை காலி பணியிடங்களும் நிரப்பப்படுவது இல்லை என்பதே உண்மை இதில் சுமார் 20 முதல் 30 சதவீத பணியிடங்கள் மட்டுமே அரசு பணியாளர் தேர்வாணைய மூலம் நிரப்பப்படுகின்றன.

குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பணியிடங்களில் தொகுப்பு ஊதிய அடிப்படையிலேயே நிரப்பப்படுகின்றன இது இளைஞர்களின் அரசு பணி முயற்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடுதோறும் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வாணையம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு நிலையில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கு அதிகமானோர் பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு பதனாயிரம் பேருக்கும் 2019-ல் ஏறத்தாழ 9800 பேரும் அரசு பணி வாய்ப்பு பெற்றனர் கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020-21 ஆம் ஆண்டுகளில் அரசு பணியாளர் தேர்வாணையங்கள் தேர்வுகள் நடத்தவில்லை இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் குரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியானது முதல் கட்டமாக 7,31 காலி பணியிடங்கள் தேர்வு அறிவிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகள் அரசு பணியாளர் தேர்வு நடைபெறாத நிலையில் ஆண்டுக்கு சராசரியாக 10,000 என்ற அடிப்படையில் ஏறத்தாழ 30 ஆயிரத்துக்கும் அதிகமான காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்த அரசு பணி நாடுபவர்களுக்கு எந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது பின்னர் மறு அறிவிப்பானை வெளியிடப்பட்டு 1017 காலி பணியிடங்களுக்கு தகுதியான தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.

Education and Job Whatsapp Group Join

இருப்பினும் இந்த எண்ணிக்கை அரசு பணி நாடுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை இரண்டு ஆண்டுகள் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு நடைபெறவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டு காலி பணியிடங்களை உயர்த்தி இளைஞர்களுக்கு அரசு பணி நடவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்போதே உரக்க ஒழிக்க தொடங்கியது.

இருப்பினும் அறிவிக்கபடியே 425 கிராம நிர்வாக அலுவலர்கள், 4952 இளநிலை உதவியாளர்கள், 3311 தட்டசர்கள், ஸ்டெனோ தட்டசர்கள் 1176 நிலை 3 உட்பட 1017 பணியிடங்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி தேர்வானது நடைபெற்றது.

வழக்கமாக ஓரிரு மாதங்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற நிலையில் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக எந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியாவதில் நீண்ட நெடிய தாமதம் ஏற்பட்டது ஏறத்தாழ 8 மாதங்களுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.

ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் தேர்வு நடைபெறாத நிலையில் ஏறத்தாழ மீண்டும் ஓராண்டு காலம் (எட்டு மாதங்கள்) தேர்வு முடிவுகள் வெளியிடுவதே தாமதத்தை ஏற்படுத்தியதால் காலி பணியிடங்களை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

ஆண்டுக்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பணி வழங்கப்படும் என ஏற்கனவே திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி குறைந்தபட்சம் 30,000 பேருக்காவது பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்கின்றனர்.

அரசு பணியை நாடுபவர்கள் இந்த நிலையில் 20223 குரூப்-4 தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை கடந்த மே ஐந்தாம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது அதன்படி தேர்ச்சி பெற்றவர்கள் சான்றுகளை பதிவேற்றம் செய்தனர்.

இருப்பினும் சுமார் 1300 பேரின் சான்றிதழ்கள் பதிவேற்றத்தில் சில குறைபாடுகள் தேர்வாணையத்தால் கண்டறியப்பட்டன இதை அடுத்து தொடர்புடைய தேர்வுகள் குறைபாடுகள் என்று சான்றிதழ்களை மீள் பதிவேற்றம் செய்ய ஜூன் 5ஆம் தேதி முதல் ஜூன் ஏழாம் தேதி வரை அவகாசம் அளித்தது இன்னும் ஒரு வாரங்களில் நேர்காணல் நடைபெறும் என தெரிகிறது.

நேர்காணலுக்கு முன்பாக பணியிடங்களை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட பிள்ளைகளில் 10,177 பேருக்கு மட்டுமே பணி வாய்ப்பு கிடைக்கும் இது அரசு பணி கனவுடன் வலம் வரும் இளைஞர்களுக்கு பலருக்கும் பெரும் ஏமாற்றமாக இருக்கும் என்பதன் திமுகவின் தேர்தல் வாக்குறுதியை கேள்விக்குறியாக்கும்.

எனவே நேர்காணலுக்கு முன்பாக பணியிட எண்ணிக்கையை அரசு உயர்த்த வேண்டும் என்பது அரசு பணி நாடுபவர்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கோரிக்கையாகவும் உள்ளது இது தொடர்பாக குரூப் 4 தேர்வுகள் கூறியதாவது.

குரூப் 4 தேர்வு மூலம் அரசு பணிக்கு முயற்சிப்பவர்களின் பெரும்பாலான முதல் தலைமுறை பட்டதாரிகள் போட்டி தேர்வுக்காக சிறப்பு பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயில பொருளாதார வசதி இல்லாத ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் அரசு பணியையே வாழ்வின் லட்சியமாக கொண்டுள்ள இளைஞர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் வகையில் காலி பணியிடங்கள் எண்ணிக்கையை அரசு உடனடியாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்கின்றனர்.

கடந்த 2018ல் தேர்வுக்கு பின் 2300 பணியிடங்களும் 2019ல் ஏறத்தாழ 750 பணியிடங்களுக்கும் உயர்த்தப்பட்டு இளைஞர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டன நிகழாண்டிலும் நேர்காணலுக்கு முன்பாக பணியிடங்களில் எண்ணிக்கையை முதல்வர் உயர்த்தி அறிவிப்பார் என்பது இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி : தினமணி

அரசியல் தலைவர்கள் கோரிக்கை பார்க்க 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!