UPI கூகுள் பே, போன்பே வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டுபாடு வருகிறது upi transaction limit per day New Rule 2023
UPI கூகுள் பே, போன்பே வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டுபாடு வருகிறது upi transaction limit per day
UPI transaction limit per day இந்தியாவில் பேடிஎம், கூகுள் பே, போன்பே உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை ஆப்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
UPI transaction limit per day

பணப்பரிமாற்றம்
இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருக்கிறது.
சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது.
இந்த ஆப்களை கோடிக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவ்வப்போது புதுபுது அப்டேங்களுக்கு அவற்றில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. இதனை தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NCPI) இந்த கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. அதன்படி, தற்போது ஒரு புதிய கட்டுப்பாட்டை என்சிபிஐ விதித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் என்ன?
அதன்படி, ஒரு நாளைக்கு வாடிக்கையாளர் ஒருவர் அதிகப்பட்சமாக ரூ.1 லட்சம் வரை மட்டுமே யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். இது அந்தந்த வாடிக்கையாளர்களின் வங்கிகள் பொறுத்து மாறுப்படும். அதேபோன்று 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 20 முறை மட்டுமே யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள முடியும். 21வது முறை அடுத்த நாள் தான் பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, போன்பே (Phonepe), கூகுள் பே (Google pay), பேடிஎம்(Paytm) ஆகிய ஆப்களில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 10 பரிமாற்றங்கள் மட்டுமே செய்ய முடியும். இதற்கு ரூ.1 லட்சம் லிமிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி யுபிஐ வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Education and Job Whatsapp Group | Join |