TNEB Happy News Released 2024

மின்சார வாரியம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!! TNEB Happy News Released 2024

மின்சார வாரியம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!!

TNEB Happy News Released 2024

TNEB Happy News Released 2024 கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே மின்வெட்டு ஆரம்பித்து விடும் என்று மக்கள் மனதில் தோன்றும். எனவே அந்த மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க மின்மாற்றிகள் கேபிள்களை சீரமைக்க சிறப்பு பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரியமானது திட்டமிட்டுள்ளது.

TNEB Happy News Released 2024
TNEB Happy News Released 2024

நம் தமிழகத்தை பொறுத்த மட்டில் சமீப காலமாகவே தினமும் மின் தேவையானது அதிகரித்தபடியே தான் உள்ளது. கடந்த வருடத்தில் ஏப்ரல் 20-ம் தேதி தினசரி மின்சார தேவையானது மிக அதிகபட்சமாக 19,347 மெகாவாட் அளவுக்கு அதிகரித்து காணப்பட்டது. இந்த மெகாவாட் அளவு தான் இதுவரையிலான உச்சபட்ச மின் தேவை அளவாக உள்ளது.

கடந்த ஜனவரியிலேயே 17,000 மெகாவாட் மின் தேவை தாண்டி விட்ட நிலையில் இனி வரும் வெயில் காலங்களில் ஏப்ரல் மே மாதங்களில் மின் தேவையானது எப்படி பார்த்தாலும் 20000 மெகாவாட்டை எட்டி விடும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மின்வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரமானது போதுமானதாக இருக்காது. அதுமட்டுமின்றி மத்திய மற்றும் தனியார் நிறுவன மின்சாரமும் நமக்கு போதுமானதாக இருக்காது.

TNEB Happy News Released 2024

எனவேதான் 3571 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்ய மின்வாரியம் முடிவெடுத்துள்ளதாக நான்கு நாட்களுக்கு முன்பாக கூட செய்திகள் வெளியாகி இருந்தன.

மேலும் ஒரு மாதத்திற்குள் 4321 மெகாவாட் வாங்கப்பட உள்ள நிலையில் இதில் 600 மெகாவாட் பரிமாற்ற முறையிலான மின்சாரமும் நீதி நகவாக்கள் மின் கொள்முதல் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மின்சாரத்தை ராஜஸ்தான், பஞ்சாப், உத்தர பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து பெறப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.

அதேபோல இந்த மின்சாரத்திற்கு பணம் எதுவும் தரப்போவது இல்லையாம். அதற்கு பதிலாக தமிழகத்தில் உள்ள காற்றாலை சீசன் துவங்கிய உடனே பரிமாற்ற முறையில் வாங்கப்படும் .மின்சாரம் அந்தந்த மாநிலங்களுக்கே திரும்ப வழங்கப்பட்டு விடுமாம். இது ஒரு குறுகிய கால ஏற்பாடு என்றாலும் கோடை காலத்தில் நமக்கு தேவையான மின் தேவை இதனால் பூர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு சிறப்பு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

மொத்தத்தில் மின் தேவையை தீர்ப்பதற்காகவும் கோடை காலத்தில் மின்சார பிரச்சனையால் யாரும் அவதிப்படாமல் இருக்கவும் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கையானது பொது மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!