Kerala Introduced AI Teacher Viral News March 11

இந்தியாவில் முதன்முறையாக AI ஆசிரியர் அறிமுகம்!- மாணவர்கள் உற்சாகம்!! Kerala Introduced AI Teacher Viral News March 11

இந்தியாவில் முதன்முறையாக AI ஆசிரியர் அறிமுகம்!- மாணவர்கள் உற்சாகம்!!

Kerala Introduced AI Teacher Viral News March 11

Kerala Introduced AI Teacher Viral News March 11 இந்தியாவில் முதன்முறையாக AI ஆசிரியர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .இந்த ஏ ஐ ஆசிரியர் கேரளா பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Kerala Introduced AI Teacher Viral News March 11
Kerala Introduced AI Teacher Viral News March 11

மனிதர்களுடைய வேலைகளை எளிதாக மாற்றும் திறன் கொண்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் உலகில் AIகருவிகள் உடைய பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் குறிப்பாக சேட் ஜி பி டி யின் உடைய வெற்றி தான் அடுத்த கட்ட ஏ ஐ கருவிகளை எடுத்துச் சென்றது என்று கூறப்படுகிறது.

ஏ ஐ கருவிகள் மனிதர்களின் வேலைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் மேலும் எதிர்காலத்தில் மக்களின் வேலைகளை கூட இது பறிக்க நேரிடும் .இந்த நிலையில் தான் இப்போது இந்தியாவில் முதன்முறையாக AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு ஐரிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது .

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் கே டி சி டி உயர்நிலைப் பள்ளியில் ரோபோ வகையில் உருவாக்கப்பட்டுள்ள பெண் ஆசிரியை பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது. இது சம்பந்தமான வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஏ ஐ ஆசிரியையின் சிறப்பம்சங்கள்:

  • மாணவர்களின் பாடம் பாடம் சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்து வைக்கவும் பாடங்களை சொல்லிக் கொடுக்கவும் திறன் கொண்ட ஐரிஸ் என்ற ஏஐ ஆசிரியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த ஏ ஐ ஆசிரியை மாணவர்களிடம் உரையாடலையும் மேற்கொள்ளும் இது மூன்று மொழிகளை பேசும் திறனை கொண்டது.
  • தனித்துவமான கற்றல் திறன் இந்த ஐரிஸ் ரோபோவிடம் உள்ளது.
  • இது மாணவர்களிடம் நட்பு கொண்டு பழகும்.
  • பயனுள்ள பாடங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு ஐரிஸ் கற்றுக்கொடுக்கும்.
  • ஐரிஸ் மூலம் மாணவர்கள் தனித்துவமான கற்றல்  ஆற்றலை பெற்றுக் கொள்ளலாம் .
  • ஒவ்வொரு மாணவருடைய தேவைகள் மற்றும் கற்றல் ஆற்றலுக்கு ஏற்ப ஐரிஸ் செயல்படும்.

இதன் மூலமாக எதிர்காலத்தில் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு வேலைகளை இழக்கும் சூழல் கூட ஏற்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

எனவே ஐரிஸ் ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் மட்டும் தானே தவிர அதற்கு உணர்ச்சிகள் கிடையாது. அக்கறை என்பது கிடையாது எனவே இது ஆசிரியர்களுக்கு உதவி புரியும் மற்றொரு ஆசிரியை மட்டுமே என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!