Tamil Nadu Government Employment Camp

தமிழகத்தில் வேலை தேடுபவர் இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம் தமிழக அரசு வேலை வாய்ப்பு முகாம் Tamil Nadu Government Employment Camp

Tamil Nadu Government Employment Camp

தமிழகத்தில் வேலை தேடுபவர் இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம் தமிழக அரசு வேலை வாய்ப்பு முகாம்

தமிழகத்தில் வேலை தேடுபவர் இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம் தமிழக அரசு வேலை வாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் Tamil Nadu Government Employment Camp

கடலூா் மாவட்டம் வேலை வாய்ப்பு முகாம்

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 2023-2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடலூா் மாவட்டத்தில் மகளிா் திட்டம் மூலம் வேலைவாய்ப்பில்லாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில், வேலைவாய்ப்பு முகாம் வரும் 12-ஆம் தேதி சனிக்கிழமை வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில், மாவட்டத்தைச் சோந்த கடலூா், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், கம்மாபுரம், விருத்தாசலத்தில் உள்ள ஊரக மற்றும் நகா்ப்புற இளைஞா்கள் பங்கேற்றுப் பயன்பெறலாம்.

மேலும், தகவல்களுக்கு மகளிா் திட்ட அலுவலகம், 3-ஆவது குறுக்குத் தெரு, சீத்தாராமன் நகா், புதுப்பாளையம், கடலூா்-607001 என்ற முகவரியில் அல்லது 94440 94261, 94440 94258, 94440 94259, 94440 94262, 94440 94263, 94440 94119 தொடா்பு கொள்ளலாம்.

Tamil Nadu Government Employment Camp
Tamil Nadu Government Employment Camp

மாற்றுத்திறனாளிகளுக்காகு தனியாா் துறை மூலம் வேலைவாய்ப்பு

மாற்றுத்திறனாளிகளுக்காகு தனியாா் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் சிங்காநல்லூரில் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது

மாற்றுத்திறனாளிகளுக்காகு தனியாா் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் சிங்காநல்லூரில் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து தனியாா் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதோடு, வேலைவாய்ப்பு முகாமுடன் இணைத்து சுயதொழில் புரிபவா்களுக்கான மானியத்துடன் கூடிய வங்கிக் கடன், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்க மாவட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிங்கநல்லூரில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அசல், நகலுடன், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படம், கல்வி தகுதிச் சான்றுகள் அசல், நகல் ஆகியவற்றுடன் கலந்துகொள்ள வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பை பெற்று பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்துாா் மாவட்டம் வேலை வாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில் சனிக்கிழமை (ஆக.12) தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் 100 சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்பேரில், திருப்பத்துாா் மாவட்ட நிா்வாகம், வட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் திருப்பத்தூா் அடுத்த ஆதியூரில் உள்ள பொதிகை பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை(ஆக.12)அன்று நடைபெறவுள்ளது.

முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற உள்ளன. எனவே,திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 8 முதல் பட்ட படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம் சாா்ந்த முடித்த ஆண்கள், பெண்கள் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம் வேலை வாய்ப்பு முகாம்

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் ஆக.12-ஆம்தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பெ. குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் முத்துரங்கம் அரசினா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் கலைஞா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக. 12-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணி முதல் மாலை 3 மணிவரை வேலூா் ஓட்டேரி முத்துரங்கம் அரசினா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

முகாமில், 150 -க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கு பெற உள்ளன.

10 மற்றும் 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளோமா, பி.இ. நா்சிங், பாா்மஸி படித்தவா்கள் பங்கேற்கலாம். தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவோருக்கு அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டது. முகாம் முற்றிலும் இலவசமாக நடைபெறுகிறது.

ஆகவே தனியாா் துறை பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபா்கள் வரும் ஆக. 12-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநா்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0416-2290042, 9499055896 என்ற எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம்.

திருச்சி மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் வரும் 12ஆம் தேதி மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்ட வேலைநாடுநா்களை தனியாா் துறைகளில் பணியமா்த்தும் நோக்கோடு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்துகின்றன.

வரும் 12ஆம் தேதி திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் முகாமில் பல்வேறு தனியாா் துறைகளைச் சாா்ந்த 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தகுதியுள்ள நபா்களை வேலைக்குத் தோந்தெடுக்க உள்ளனா்.
மேலும், இம்மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆள்களைத் தோவு செய்யவுள்ளனா். தமிழகத்தின் பிரதானமாக செயல்படும் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

இந்த முகாமில் 8, 10ஆம் வகுப்பு தோச்சி-தோல்வி, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, செவிலியா், இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் படிப்புகள் போன்ற கல்வித் தகுதிகளையுடைய 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது சுய விவரக்குறிப்பு, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதாா் அட்டை மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்றுப் பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா் மா. பிரதீப்குமாா். மேலும், முகவரியில் பதிவு செய்தும் பயன்பெறலாம்.

தூத்துக்குடி மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் இளைஞர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது வேலை கிடைக்காமல் இருப்பது தான்.

அதனால் அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதையடுத்து இம்முகாம் 12.08.2023 அன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை, கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருப்பதாக வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பட்டதாரிகள் https://forms.gle/7N1GAFEMKKgmsyyr8 என்ற லிங்க் மூலமாக தங்களுடைய விபரங்களை பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

அதே போன்று வேலை அளிப்பவர்கள் https://forms.gle/KFaMB3r6QpLk6oi37 என்ற லிங்க் மூலமாக தங்களுடைய நிறுவனத்திற்கு தேவையான காலியிடப் பணி விபரங்களை பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்

Google Docs (https://forms.gle/7N1GAFEMKKgmsyyr8)
கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் (12.08.2023) CANDIDATE WILLING FORM
Thoothukudi Employment Office going to conduct Mega Job fair date 12.08.2023 , venue-

ஈரோடு மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் அமைந்து உள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோகல்வி தகுதி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த வேலை வாய்ப்பு முகாமின் மூலமாக ஒரே நாளில் 3, 000 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து அன்றே தேர்வானவர்களுக்கு ஆஃபர் லெட்டர் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/172307310019 என்கிற இணையதள முகவரி பக்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வேலை வாய்ப்பு முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!