ஜியோவுக்கு பெரிய கும்பிடு.. வெறும் ரூ.474 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் டேட்டா.. 300எம்பிபிஎஸ் வேகம்
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களையே தூக்கிசாப்பிடும் வகையில் வெறும் ரூ.474 விலையுள்ள திட்டத்தின் மூலம் 365 நாட்களுக்கு 300எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட்டை வழங்குகிறது, எக்ஸிடெல் (Excitel) என்னும் நிறுவனம். இந்த எக்ஸிடெல் ரூ.474 திட்டத்தின் (Excitel Rs 474 Plan) விவரம் இதோ.
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் மட்டுமே மொபைல், பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவைகள் வழங்குவதில் முன்னணியில் இருக்கின்றன. இந்த நிறுவனங்களை தவிர்த்து மிஞ்சிப்போனால், பிஎஸ்என்எல் திட்டங்களை அதிகம் பேர் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த நிறுவனங்களின் கண்ணில் விரல்விட்டு ஆட்டும்படி எக்ஸிடெல் என்னும் புதிய பிராட்பேண்ட் நிறுவனம், மலிவு விலை திட்டங்களை கொடுத்து வருகிறது.
அந்த வரிசையில், எக்ஸிடெல் நிறுவனம் வெறும் ரூ 474 திட்டத்தின் மூலம் தடையில்லா பிராட்பேண்ட் இன்டர்நெட்டை ஆண்டு முழுவதும் வழங்குகிறது. இதுவே வியப்பாக இருந்தால், அந்த பிராட்பேண்ட்டில் மொபைல், டிவி, கம்ப்யூட்டர் என்று எத்தனை டிவைஸ்களை வேண்டுமானாலும் கனெக்ட் செய்துகொள்ளலாம் என்றால் எப்படி இருக்கும்? அதைத்தான் அந்த நிறுவனம் செய்துவருகிறது.

எக்ஸிடெல் ரூ 474 திட்ட விவரங்கள் (Excitel Rs 474 Plan Details): ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் பிராட்பேண்ட் திட்டங்களைவிட மலிவான விலையில் நல்ல சலுகைகளை இந்த எக்ஸிடெல் ரூ 474 திட்டம் வழங்குகிறது. இந்த திட்டத்துக்கு எக்ஸிடெல் பீஸ்ட் பிளான் (Excitel Beast Plan) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கனெக்ஷனுக்கு பணம் வசூலிக்கப்படுவதில்லை. வெறும் திட்டத்திற்கான பணத்தை மட்டுமே கொடுத்தால் போதும், உங்களுக்கு 12 மாதங்களுக்கு 30 எம்பிபிஎஸ் முதல் 300 எம்பிபிஎஸ் வரையிலான வேகத்தில் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை வழங்கப்படும். இந்த திட்டத்தின் பிரம்மாண்ட சலுகை என்னவென்றால், இதன் வாடிக்கையாளர்கள், ஒரே நேரத்தில் எத்தனை டிவைஸ்களில் வேண்டுமானாலும், இன்டர்நெட்டை கனெக்ட் செய்து கொள்ள முடியும்.
இதனால், இன்டர்நெட் வேகத்தில் மாறுபாடு ஏற்படுமே தவிர இணைப்பு துண்டிக்கப்படாது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு வீட்டில் உள்ள கம்ப்யூட்டர், மொபைல்கள், ஆண்ட்ராய்டு டிவி போன்ற இன்டர்நெட் தேவைப்படும் பல்வேறு டிவைஸ்களை ஒரே நேரத்தில் கனெக்ட் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் என்ற வேலிடிட்டியும் கொடுக்கப்படுகிறது.
இதற்கேற்ப இன்டர்நெட் வேகத்திலும் மாறுபாடுகள் இருக்கும். அதாவது, ரூ.717 திட்டத்தில் 3 மாத வேலிடிட்டியும், ரூ.500 திட்டத்தில் 6 மாத வேலிடிட்டியும், ரூ.474 திட்டத்தில் 12 மாத வேலிட்டியும் கொடுக்கப்படுகிறது. இதில் விலைக்கு ஏற்ப 30 எம்பிபிஎஸ் முதல் 300 எம்பிபிஎஸ் வரையிலான இன்டர்நெட் வேகம் இருக்கும். இருப்பினும், சராசரியான வேகத்தில் ஆண்டு முழுவதும் இன்டர்நெட் கனெக்டிவிட்டி வேண்டும் என்றால், ரூ. 474 திட்டத்தையே பயன்படுத்தலாம்.
இந்த திட்டத்தில ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்களின் சந்தா கிடைக்காது. ஆனால், எக்ஸிடெல் ரூ 595 திட்டத்தில் ஓடிடி (OTT) மற்றும் டிடிஎச் (DTH) சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதுவும் 12 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும். இந்த நாட்களில் 400 எம்பிபிஎஸ் வேகத்தில் 550 லைவ் டிவி சேனல்களை கண்டுகளிக்க முடியும்.
அதோடு, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 போன்ற முன்னணி ஓடிடி தளங்களின் சப்கிரிப்ஷனும் கிடைக்கும். இந்த பீஸ்ட் பிளான் குறித்து எக்ஸிடெல் நிறுவனத்தின் சிஇஓ விவேக் ரைனா கூறுகையில், “இந்த 300 எம்பிபிஎஸ் திட்டத்தை, நம்பமுடியாத மலிவு விலையில் வழங்குவதன் மூலம், எங்களது வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் அனுபவங்களை மேம்படுத்துவதை அடிப்படையாக கொண்டுள்ளோம்.
அதோடு, அவர்கள் இன்டர்நெட்டை அதீத வேகத்தில் பயன்படுத்துவதற்கும் உதவுகிறோம். குறிப்பாக, எங்களது வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக தடையற்ற, நம்பகமான அதே வேளையில் அதிவேக கனெக்டிவிட்டையை வழங்குவதில் எங்களது அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது எனத் தெரிவித்தார். இந்த நிறுவனத்தின் அனைத்து திட்டங்களும் மிகப்பெரும் வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.