பாலிடெக்னிக் படிப்புகளில் மாற்றம் கிரெடிட் மதிப்பெண் – விதிமுறைகள் வெளியீடு Tamil nadu Polytechnic New Syllabus 2023 Download PDF
Polytechnic New Syllabus 2023 Download PDF
பாலிடெக்னிக் படிப்புகளில் மாற்றம் கிரெடிட் மதிப்பெண் – வரைவு விதிமுறைகள் வெளியீடு.
Polytechnic New Syllabus 2023 Download PDF புதிய கல்வி கொள்கையில் உள்ள அம்சங்களின்படி, பாலிடெக்னிக் படிப்புகளில் மாற்றம் செய்து, வரைவு விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்கள், தமிழகத்தில் உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் படிப்படியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த வரிசையில், பாலிடெக்னிக் படிப்புகளின் விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்து, வரைவு விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின், dte.tn.gov.in என்ற இணையதளத்தில், இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
Diploma Result Today Update – Click
Diploma New syllabus 2023 Tamil nadu
புதிய விதிமுறைகளில், தேசிய அங்கீகார அமைப்பான என்.பி.ஏ., கூறியது போன்று, ‘கிரேடு’ மதிப்பெண் முறை, திறன்சார் விருப்பப் பாடம், தேர்வு முறைகளில் அகமதிப்பீடு முறை போன்றவை இடம் பெற்றுள்ளன.
‘தமிழ் மரபு என்ற விருப்பப் பாடம், முதல் செமஸ்டரில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் வழி படிப்புக்காக சில பாடங்கள் அனுமதிக்கப்படும்.
‘அதைத்தவிர, மற்ற அனைத்து பாடப்பிரிவுகளும் ஆங்கில வழியில் மட்டுமே கற்பிக்கப்படும். திட்ட அறிக்கை ஆங்கிலத் தில் சமர்ப்பிக்கப்பட வேண் டும்’ என கூறப்பட்டுள்ளது.
ஒரு ஆண்டு வரை இடைநின்று மீண்டும் சேருவது, ஏற்கனவே தேர்வு செய்த பாடப்பிரிவில் கூடுதல் பாடங்களை சேர்ப்பது, இன்ஜினியரிங், கலை அறிவியல் படிப்பு போன்று, ‘கிரெடிட்’ மதிப்பெண் வழங்குதல் என, பல்வேறு அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
Polytechnic Staff Whatsapp Group | Join Staff |
Polytechnic Student Whatsapp Group | Join Students |