பெண் ஓட்டுநர் ஷர்மிளா குடும்ப பின்னணி என்ன? Driver Sharmila Biography Tamil
Driver Sharmila Biography Tamil
பெண் ஓட்டுநர் ஷர்மிளா குடும்ப பின்னணி கோவையில் தனியார் பேருந்தில் டிரைவர் பணியில் சேர்ந்தார் Driver Sharmila Biography Tamil : 7 வயதில் இருந்தே டிரைவிங் மீதான ஆசை ஷர்மிளாவிற்கு வரவே 18 வயதான பின்னர் கனரக வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டு கோவையில் தனியார் பேருந்தில் டிரைவர் பணியில் சேர்ந்தார்.
எனக்காக குடும்பமே ரிஸ்க் எடுத்தார்கள். அவர்களின் முழு ஆதரவினால்தான் தன்னால் டிரைவர் வேலையை சிறப்பாக செய்ய முடிந்தது என்று கூறியுள்ளார் ஷர்மிளா. பிரேக்கிங் செய்தியில் இடம் பிடித்த வைரல் டிரைவர் ஷர்மிளாவின் குடும்ப பின்னணியை பார்க்கலாம்.

Driver Sharmila Biography Tamil
டிரைவிங் மீது ஷர்மிளாவிற்கு சிறு வயதில் இருந்தே விருப்பம். பைக்கை எடுத்து ஓட்டும் வேகத்தை பார்த்து ‘ரைடர்’ என்றுதான் பெயர் வைத்தனர் இளைஞர்கள். ஷர்மிளாவின் அப்பா மகேஷ் ஆட்டோ டிரைவர். அம்மா ஹேமா இல்லத்தரசி. இரண்டு தம்பிகள் மற்றும் பாட்டியுடைய ஒரு சிறு குடும்பம். சிறு வயதில் இருந்தே அப்பாதான் ரோல் மாடல். அதனால் அவருடைய டிரைவர் பணி பிடித்துப்போகவே ஆட்டோ ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது.
Driver Sharmila Biodata
அப்பாவின் ஆட்டோவை எடுத்து ஓட்ட பழக ஆரம்பித்தாராம் ஷர்மிளா. அப்பாவின் உதவியோடு படிப்படியாக கார் ஓட்ட கற்று கொண்டார். இதையடுத்து சிலிண்டர் கொண்டு செல்லும் வாகனத்தில் டிரைவராக வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போதுதான் பெரிய கனரக வாகனங்களையும் ஓட்ட வேண்டும் என்ற ஆசை வரவே லைசென்ஸ் எடுத்துள்ளார்.
பெண் ஓட்டுநர் ஷர்மிளா குடும்ப பின்னணி
பஸ் ஓட்ட வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பஸ் மீது ஒரு தீராக் காதல் இருந்தது. அதற்கு காரணம், எங்க வீட்டில் ஆட்டோ இருந்ததால் பெரும்பாலும் எங்களின் பயணம் ஆட்டோவில்தான் இருக்கும். நிறைய பேர் அமர்ந்து செல்லும் அந்த உயரமான பஸ்ஸை பார்த்துக்கொண்டே கடந்துபோகும்போது, நாம எப்போப்பா இப்படி பஸ்ல போவோம்னு என் அப்பாவிடம் கேட்டே விட்டேன். அந்த அளவுக்கு எனக்கு பஸ்ஸில் பயணம் செய்யும் வாய்ப்பு வரவே இல்லை. அதனால் பஸ்ஸின் மீது எனக்கு தனி ப்ரியம் வர இதுவும் ஒரு காரணம் என்று கூறியுள்ளார்.
2019 முதலே கோவையில் ஆட்டோ ஓட்டி வந்தேன். நான் கனரக வாகன உரிமம் பெறுவதற்கும் என் அப்பாதான் முழு காரணம்.
கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வரை செல்லும் தனியார் பேருந்தின் டிரைவர் சீட்டில் கெத்தாக அமர்ந்து ஓட்டினார் ஷர்மிளா. போக்குவரத்து நெருக்கடி நிறைந்த கோவை வீதியில் டவுன் பஸ்சில் உற்சாகமாக வலம் வருவார் ஷர்மிளா. பெண் பேருந்து டிரைவரான ஷர்மிளாவை பேருந்தில் வரும் பயணிகள் முதல் பிரபலங்கள் வரை வாழ்த்தி வந்தனர். மகளிர் தினத்தன்று கோவையின் ஹாட் டாப்பிக் இவர்தான். பேஸ்புக் ரீல்ஸ்களில் ரைடர் ஷர்மிளாதான் வைரல். லட்சக்கணக்கான பார்வைகள், ஏராளமான லைக்ஸ்களை அள்ளுவார் ஷர்மிளா. கோவை மாவட்டத்தின் முதல் பெண் தனியார் பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்ற என்னுடைய மற்றும் என் பெற்றோரின் கனவு நிறைவேறியுள்ளது என்று பெருமிதத்துடன் கூறியிருந்தார் ஷர்மிளா.

நான் காலையில் 5.30 மணிக்கு பஸ்ஸில் ஏறினேன் என்றால் இரவு 11.45 க்கு தான் இறங்குவேன். எனக்காக என் குடும்பம் முழு ஆதரவையும் கொடுத்தது. நான் வீட்டிற்கு போகும் வரை எனக்காக காத்திருப்பார்கள். பல நேரங்களில் ஒன்றாகத்தான் சாப்பிடுவோம் என்று குடும்பத்தைப் பற்றி உற்சாகமாக கூறியிருந்தார் ஷர்மிளா. ரைடர் ஷர்மிளாவின் ரீல்ஸ் பிரபலமடையவே அரசியல்வாதிகளின் கவனத்தையும் ஈர்த்தார் ஷர்மிளா.
கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷர்மிளா ஓடும் பேருந்தில் ஏறி இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். அதேபோல் திமுக எம்.பி கனிமொழி ஏற்கனவே ஷர்மிளாவுக்கு போனில் வாழ்த்திருந்தார். கோவை வந்தீங்கன்னா நம்ம பஸ்ல வாங்க மேடம் என ஷர்மிளா கேட்கவே, கண்டிப்பாக வரேன் என கனிமொழியும் உறுதி கொடுத்திருந்தார். இந்நிலையில் கோவைக்கு சென்ற கனிமொழி எம்.பி, ஷர்மிளா சென்ற பேருந்தில் இன்று பயணித்தார். பயணிகளிடமும் உற்சாகமாக பேசினார். ஷர்மிளாவிற்கு வாட்ச் ஒன்றையும் பரிசளித்தார் கனிமொழி. இதுதொடர்பாக வீடியோவும் போட்டோக்கள் இணையதளத்தில் பரவின.
Driver Sharmila Dismissed
அதே நேரத்தில் ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டதாக ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸ் வெளியானது. அதற்கான காரணம் கனிமொழி எம்.பியையும் அவருடன் வந்தவர்களையும் பெண் கண்டக்டர் கடுமையாக பேசியதாகவும் அதை எதிர்த்து கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறினார் ஷர்மிளா. கனிமொழி மேடம் என் கூட பாஸ்ல டிராவல் பண்ண வந்திருந்தாங்க. எங்க வண்டில ஓடுற லேடி கண்டெக்டர் மேடம் கிட்ட கொஞ்சம் ரூடா பேசுனாங்க. அது கஷ்டமா இருந்துச்சு.. டிக்கெட் எடுத்துட்டு தான் கனிமொழி மேடம் வண்டியில வந்திருந்தாங்க. அவங்க கிட்ட போய் மறுபடியும் டிக்கெட் கேட்டாங்க. எடுத்துட்டாங்க விடுங்கன்னு சொல்லியும் கேட்கல அவங்க.
Driver Sharmila Issue
கனிமொழி மேடம் போன பிறகு வண்டிய சோமனூர் போய் திரும்ப வந்து காந்திரபுரத்துல வண்டிய நிறுத்திட்டு ஓனர் பார்க்க போனேன். போய் அவர் கிட்ட பேசும்போதும் ஒரே வார்த்தையில் நீ பாப்புலாரிட்டிக்காக இப்படி பஸ்க்கு எல்லாரையும் கூட்டிக்கிட்டு வர்றன்னு சொன்னார்.
நாங்க பேசும் போது சண்டையாச்சு. அப்பா பேசும்போது நாங்க கனிமொழி மேடம் வர்றதை சொல்லவே இல்லைன்னு மேனேஜர் சொன்னாங்க. நான் ஏற்கனவே அவர்கிட்ட சொல்லி இருந்தேன். ஆனா நான் சொல்லவே இல்லன்னு சொல்லிட்டார். அப்போ எங்க அப்பா சொன்ன நான் என்ன பைத்தியாமான்னு கேட்க.. நீ உன் புள்ளைய கூட்டிக்கிட்டு போ-ன்னு சொன்னார். பொய் சொல்லும் போது நாம் என்ன பேச முடியும்” என ஷர்மிளா வருத்தம் தெரிவித்தார்.
அவரது பேட்டி வெளியான சில நிமிடங்களிலேயே ஷர்மிளாவை தொடர்பு தொண்ட கனிமொழி எம்.பி வேறு நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறினார். இதனிடையே கனிமொழி எம்.பி. கேட்டுக்கொண்டதற்காக ஷர்மிளாவுக்கு வேலை 2 நிறுவனங்கள் முன்வந்தன. ஸ்ரீ கிருஷ்ணா பேருந்து, ரெட் டாக்ஸி ஆகிய 2 நிறுவனங்களும் ஷர்மிளாவுக்கு ஜாப் ஆஃபர் வழங்கியுள்ளது.
Driver Sharmila News
டிரைவராக இருப்பதே எனக்கு அவ்வளவு சந்தோஷம். இதனையே தொடர்வேன். அரசு பஸ்களில் என்னைப் போன்ற பெண்களை டிரைவர்களாக முன்னிறுத்தினால் சந்தோஷப்படுவேன் என்று கூறியிருந்தார் ஷர்மிளா. பணி நீக்கம் செய்யப்பட்டபோதும் தைரியமாக எதிர்கொண்ட ஷர்மிளாவிற்கு கனிமொழி எம்.பி மூலம் உடனடியாக பணி கிடைத்தது மகிழ்ச்சியான விசயம்தான்.
கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா